லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இராணுவத்தினரை மீளப்பெறும் நடவடிக்கையின் போது இந்திய மற்றும் சீன இராணுவத்திற்கு இடையே இடம்பெற்ற மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் இராணுவத்தினரை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன இராணுவம் அத்துமீறியதாகவும் அதன்போது சீன இராணுவத்துடனான மோதலின் போது இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 3 இந்திய இராணுவ வீரர்கள் இறந்ததையடுத்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த இந்திய மற்றும் சீன இராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here