வெளிநாடுகளில் ‘கேட்டட் கம்யூனிட்டி’ என்று அழைக்கப்படும் நவீன அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்பின் மையமான பகுதியில் அகன்ற திரைகட்டி படங்களை திரையிட்டு பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

அதாவது டிரைவ் இன் தியேட்டர்கள் மாதிரி. அந்த பாணி தற்போது இங்கேயும் வரத் தொடங்கி இருக்கிறது. புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

தற்போது ஊரடங்கு தடை உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலில் குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்போடு புரொஜக்டர் மூலம் பொதுமக்கள் புது படம் பார்க்க ஏற்பாடு செய்து உள்ளனர்.கடந்த 15 நாட்களாக இங்கு படங்கள் திரையிடப்பட்டு வந்துள்ளது.

அனுமதி பெறாமல் பொது இடங்களில் திரைப்படங்களை திரையில் திரையிடுவது வீடியோ பைரசி சட்டப்படி குற்றம். எனவே இதுபோன்ற பொது திரையிடல்களை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வவேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் முதல்வர் நாராணசாமிக்கு புகார்களை அனுப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here