கொரோனா வைரஸ் தொற்று உயிர் கொல்லி ஒழிப்பிற்கான ஒளடதம் ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ விஞ்ஞானிகளை கொண்ட குழுவொன்று குறித்த தடுப்பூசிளை சுண்டெலிகளில் பாய்ச்சிய போது அவற்றில் இருந்து கொரோனா வைரஸ் அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாலிய தலைநகர் ரோமில் உள்ள தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையான ஸ்பெல்லன்ஷானி (Spallanzani) ஆய்வு கூடத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஒளடத பிரயோகத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்குட்பட்ட நோயாளர்கள் முற்றாக குணப்படுத்துவதுடன் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இத்தாலியின் பிறிதொரு மருத்துவ உற்பத்தி நிறுவனமும் தொற்று வைரஸ் கிருமியினை அழிப்பதற்காக மருந்து ஊசி ஒன்றையும் இனங் கண்டுள்ளாதாக அந்த நாட்டு ஊடங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் முதன் முறையாக இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை 29 ஆயிரத்து 984 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.



