Astrology

மேஷராசி

பெற்றோரின் ஆதரவுபெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபராசி

சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப்
பார்கள். உங்கள் செயல்களில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனராசி

முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகராசி

புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில்மதிக்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்
தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

சிம்மராசி

சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவுஉயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அறிவுத்திறன் பெருகும் நாள்.

கன்னிராசி

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள்.

துலாராசி

திடீர்பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

விருச்சிகராசி

சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சவால்களில் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

தனுசுராசி

உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள்.நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். புதிய பாதைதெரியும் நாள்.

மகரராசி

உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

கும்பராசி

அரசுவிவகாரியங்களில் அலட்சியம் வேண்டாம். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் விவாதம் வேண்டாம்.எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

மீனராசி

பழையகடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நம்பிக்கை வைத்திருந்த இடத்தில்இருந்து நல்லசெய்தி வரும். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.லாபம் பெருகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here