covid

கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட ஆரம்பித்த போது சுகாதார ஊழியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டன.

பின்னர் கொரோனா வைரசுக்கெதிரான தடுப்பூசிக்கான வயதெல்லை 50 பின்னர் 40 என குறைக்கப்பட்டது.

தற்போது கத்தாரில் ஒரு நாளைக்கு குறைந்து 25 ஆயிரம் தடுப்பூசிகள், கத்தாரில் அமைந்துள்ள 35 நிலையங்களில் வழங்கப்படும் வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான வயதெல்லையை 35 ஆக கத்தார் சுகாதார அமைச்சு குறைத்துள்ளது.

கத்தாரில் இதுவரை 1,200,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வயதெல்லையை 35 ஆக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here