அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறைந்து வருவதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தியினை அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உற்சாகமாக பதிவிட்டுள்ளார். இது மிகவும் நல்ல செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சில இடங்களில் இன்னும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பிரச்சினை இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி அமெரிக்காவில் 1,486,376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 89,549 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இந்தநிலையில் அங்கு தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கின்ற நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் 865பேர் உயிரிழந்தனர்.
அத்தோடு, தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்ற நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் 19,891பேர் பாதிக்கப்பட்டனர்.



