சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அண்மையில் திருநங்கை ஒருவர் முதற்தடவையாக செய்தி வாசிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இச்சம்பவம் பங்களதேஷில் இடம்பெறுள்ளது.இதனை சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதன்போது, தனது முதலாவது செய்தி வாசிப்பை நிறைவு செய்த திருநங்கையான தாஷ்னுவ அனன் ஷிஷிர், ஆனந்த கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சுமார் 3 நிமிட செய்தி வாசிப்பிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பங்களதேஷில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் நிறுவனமொன்று, திருநங்கையான தாஷ்னுவ அனன் ஷிஷிருக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.



