வங்களா விரிகுடாவில் அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம் நாளை மறுதினம் (10) உருவெடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொகமட் சாலிகீன் தெரிவித்தார்.
கடந்த மாதம் அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்கம் உருவாகி, பின்னர் சூறாவளியாக மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தென்மேல் பருவ பெயர்ச்சி காலம் ஆரம்பித்துள்ளதால் இன்னும் ஒரு தினங்களுக்கு நாட்டில் மழையுடனான காலநிலையே நிலவ கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடற் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை காணப்படும்இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் மீனவர்கள், கடல்சார் தொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் செயல்ப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



