சார்வரி வருடம் புரட்டாசி 06 ஆம் நாள் செப்டம்பர் 22, 2020 செவ்வாய் கிழமை. சஷ்டி திதி இரவு 09.32 மணிவரை அதன் பின் சப்தமி. அனுசம் நட்சத்திரம் இரவு 07.18 மணி வரை அதன் பின் அதன் பின் கேட்டை நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிகம் ராசியில் பயணம் செய்வதால் மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும் பேச்சில் நிதானம் தேவை.

மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்

ரிஷபம்

சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் வீடு தேடி வரும். குடும்பம் குதூகலமாக இருக்கும்.

உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை நடைபெறும்.

மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடிகள் ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபார ரீதியான முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைய முடியும்.

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவி கிடைக்கும்

கன்னி

சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் தேடி வரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் நல்ல செய்திகள் தேடி வரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தனவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் பயணம் செய்வதால் பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு 12 வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும். இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்குடைய புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உங்களுடைய குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் முயற்சி செய்யும் வங்கி கடன் கிட்டும்.

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களால் திடீர் பிரச்சினைகள் வரலாம் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here