சார்வரி வருடம் புரட்டாசி 09 ஆம் நாள் செப்டம்பர் 25, 2020 வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 07.02 மணிவரை அதன் பின் தசமி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 06.31 மணி வரை அதன் பின் அதன் பின் உத்திராடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சுக்கிரன் ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஒன்பதாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூறியுள்ளன. இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும். வேலை செய்யும் இடத்தில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. குருவின் பார்வையால் குதூகலம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். வியாபாரம் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பெரிய அளவில் பண முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். அலுவலகங்களில் கவனமுடன் செயல்படுங்கள் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபார வளர்ச்சிக்காக போடும் திட்டங்களால் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பணம் வரும் கடன் பிரச்சினை தீரும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் வரும். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் நன்மைகள் நடைபெறும் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் கிடைக்கும் கடன்கள் குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். நினைத்தது நிறைவேறும். இன்று உங்கள் மனதிற்கு புதிய தெம்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். விஐபிக்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்குள் பயணம் செய்வதால் மனதில் தடுமாற்றம் ஏற்படும். உங்க ராசிக்குள் மூன்று கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இன்றைய தினம் உங்களின் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். ஜென்மசனியால் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். வீட்டில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்காக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் தேவை. புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும் கவனம் தேவை.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. வேலை செய்யும் இடத்தில் கவனமாக வேலை செய்யவும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் நிகழும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.

