சார்வரி வருடம் புரட்டாசி 01 ஆம் நாள் செப்டம்பர் 17, 2020 வியாழக்கிழமை. அமாவாசை திதி மாலை 04.30 மணிவரை அதன் பின் பிரதமை. பூரம் நட்சத்திரம் காலை 09.48 மணி வரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம் சந்திரன் இன்றைய தினம் சிம்மம் ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்வதால் மகரம் ராசிக்காரர்களுக்கும் கும்பம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நான்கு ராசிக்காரர்களும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கவும்
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ஐந்து மற்றும் ஆறாம் வீடுகளில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும் பிற்பகலுக்கு மேல் நிதி நெருக்கடி நீங்கும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான முறையில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்கள் வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.
கடகம்
உங்களின் ஆரோக்கியம் இன்று அற்புதமாக இருக்கும். இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். வீண் செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்
கன்னி
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
துலாம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.
விருச்சிகம்
சந்திரன் உங்களுக்கு மனதில் உற்சாகத்தை கொடுக்கும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.
தனுசு
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
மகரம்
சந்திரன் சஞ்சாரம் வரை பிற்பகல் வரை எட்டாம் இடத்தில் உள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியான புதிய முயற்சி எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்யும் வேலையில் நிதானமும் கவனமும் தேவை.
கும்பம்
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பிற்பகல் 3 மணிக்கு மேல் கவனமும் எச்சரிக்கையும் தேவை. வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு சாதகமாக இருக்கிறார். இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி அதிகரிக்கும்.

