அவுஸ்திரேலியாவில் 10 வயது சிறுமி ஒருத்தி இரத்த வெள்ளத்தில் கிடக்க, அவரது உறவினரான 14 வயது சிறுமி தலைமறைவானாள்.
இன்று அதிகாலை பண்ணைக்கு சென்று திரும்பிய பெண் ஒருவர், தனது சகோதரருடைய மகள் இரத்த வெள்ளத்தில் கிடக்க, தனது 14 வயது மகள் அங்கில்லை என்பதை உணர்ந்து பொலிசாருக்கு தகவலளித்தார்.
பொலிசார் வந்து பார்க்கும்போது, கழுத்திலும் முகத்திலும் சரமாரியாக குத்தப்பட்டிருந்த அந்த 10 வயது சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தாள்.
அவளது உடலில் கத்தியால் கீறி சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. பொலிசார் அந்த 14 வயது சிறுமியை தீவிரமாக தேடிய நிலையில், மற்றொரு பண்ணையில் ஒளிந்திருந்த அவளைக் கண்டுபிடித்தனர்.
தனது உறவினரான அந்த 10 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து, அவளை பலமுறை கத்தியால் குத்திக் கொன்றதாக அந்த 14 வயது சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த 10 வயது சிறுமி, தனது உறவினரான அந்த 14 வயது சிறுமியுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக, 350 கிலோமீற்றர் பயணித்து வந்துள்ளாள்.
அந்த சிறுமி ஏன் தன் உறவினரான சிறு பெண்ணைக் கொலை செய்தாள் என்பது இதுவரை தெரியவரவில்லை.
ஒரு குடும்ப தங்கள் மகளை பலி கொடுத்து, மற்றொரு குடும்பம் தன் மகளை குற்றவாளியாக சந்தித்துள்ள நிலையில், அந்த குடும்பங்கள் துக்கம் அனுஷ்டிக்கும் நிலையில் மேலதிக தகவல்கள் எதையும் பொலிசார் இப்போதைக்கு வெளியிடவில்லை.



