கம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

16.71 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கம்போடியாவில் 122 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

இவர்கள் அனைவரும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

எனினும் நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் பூச்சியத்தை அடைந்திருந்தாலும், வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று கம்போடிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here