பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 91 பயணிகள் 7 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 98 பேர் பயணித்தனர்.

அந்த விமானம் மக்கள் அதிகம் வசித்து வரும் மலிர் நகரின் மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 99 பேரும் உயிரிழந்து விட்டதாக கராச்சி மேயர் வாசிம் அக்தர் தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சாரா அபிட்டும் பயணம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவரும் இறந்திருக்கக் கூடும் அஞ்சப்படுகிறது

பாகிஸ்தான் மாடல் அழகி சாரா அபிட்பிரபல ஆடை வடிவமைப்பாளர் காதிஜா ஷா டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டதன் மூலம் சாரா அபித் பயணம் செய்தது உறுதியாகியுள்ளது.

காதிஜா ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று நடந்த விமான விபத்தின் மூலம் பேஷன் தொழில் சாரா அபிட்டை இழக்கிறது’’ என பதவிட்டுள்ளார்.காதிஜா ஷாவைத் தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here