5,14 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களே இலக்கம் 5ஐ கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள்.

வழமையாக இவர்களுக்கு தான் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள் என்கிறது எண் கணித சாஸ்திரம்.

இதில் உண்மையும் உண்டு.பொதுவாக 5ம் இலக்கம் கொண்டவர்கள் பழகுவதற்கு எழிமையானவர்கள். இவர்கள் பிறர் மனதை நோகடிக்க மாட்டார்கள்.

அது போக இதன் காரணத்தால் அடிக்கடி காதல் வயப்படுவதும் உண்டு.

5ம் எண்ணை பிறப்பாக கொண்ட ஆண்கள்:

இவர்கள் பொதுவாக கலகலப்பாக பேச வல்லவர்கள். பல நண்பர்களை வைத்திருப்பார்கள். எவரையும் எடுத்தெறிந்து பேசிப் பழக்கம் இல்லாத அப்பாவிகளாக இருப்பார்கள்.இவர்கள் காதல் வசப்படுவதை விட. பொதுவாக இவர்களை காதலிக்கும் பெண்கள் தான் அதிகமாக இருப்பார்கள். கடும் உழைப்பாளிகளாக இருப்பதோடு.குடும்ப அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அம்மா அக்கா என்று உறவுகள் மேல் அதிக பாசம் வைத்திருப்பதனால்,பொதுவாக மனைவிக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. படிப்பில் மத்திமம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

5ம் இலக்கத்தில் பிறந்த பெண்கள்:

கலகலவென்று முத்து சிதறியது போல சிரித்துப் பேசும் பெண்களாக இருப்பார்கள். மிகவும் நுணுக்கமான அறிவு கொண்டவர்களாகவும்.சட்டென விடையங்களை புரிந்து கொள்ளும் பெண்களாகவும் இவர்கள் இருப்பார்கள். பொதுவாக பல ஆண் நண்பர்களை இவர்கள் வைத்திருந்தாலும் எல்லை மீறிச் செல்லமாட்டார்கள்.தமக்கு ஏற்ற துணையை தேடிக் கண்டு பிடிப்பதிலும் இவர்கள் கெட்டிக்காரர்கள்.

பெண்களை பொறுத்தவரை 5ம் இலக்கத்தில் அவர்கள் பிறந்திருந்தால் சொல்லவே தேவை இல்லை.அவர்கள் உறவினர்களை நம்புவதை விட, நண்பர்களை நம்புவது அதிகமாக இருக்கும்.

அலுவலங்களில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்த 5ம் நபர் பெண்களாக தான் இருப்பார்கள்.இவையே இயல்பான குணாதிசையங்கள் என்கிறது எண் கணித ஜோசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here