வீட்டை சுற்றி அரணை நடமாட்டம் இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா? ஏனெனில் அரணைக்கு பயந்து பூரான், சிறு பூச்சிகள், தேள் போன்றவை வீட்டை அண்டாது.

கிராமத்தில் உள்ளவர்களுக்கு இதன் பெருமை புரியும். விஷ பூச்சிகளிடம் இருந்து மனிதர்களை காப்பதில் இவைகளுக்கு முக்கிய பங்குண்டு.

மனிதர்கள் அரணை தீண்டி இறந்ததாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. காட்டுப்பகுதியில் இருக்கும் அரணைகள் மட்டுமே பார்க்க ராட்சத உருவத்துடன் இருக்கும்.

இவைகளும் எந்த ஆபத்தையும் விளைவிப்பதில்லை. அரணை நக்கினாலோ அல்லது அதனது மூச்சு காற்று பட்டாலோ இறப்பு ஏற்படும் என்ற கூற்றும் உண்டு.

ஆனால் இப்படியும் யாரும் இறந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.எதிரிகள் இதனை தாக்க வந்தால் கூட இவை என்ன செய்யும் தெரியுமா?

தன்னை காத்துக்கொள்ள பல்லியை போலவே தனது வாலை துண்டித்து, எதிரியை திசைதிருப்ப மட்டுமே முயற்சிக்கும். மற்றபடி இவை கடிக்க முற்படுவதில்லை.

அரணை விஷமுடையது இல்லையெனில் உடனடியாக சீனர்கள் இதனை தங்களது உணவு பட்டியலில் சேர்த்திருக்க வேண்டுமே? ஏன் அப்படி ஏதும் நடக்கவில்லை?

என்ற சந்தேகம் அடுத்து எழாமல் இருக்காது. ஒருமுறை மனைவி ஒருவர் தனது கணவனது கொடுமையில் இருந்து தப்பிக்க, அரணையை பொடியாக்கி குடிக்கும் காப்பியில் கலந்து கொடுத்து கொன்றதாக ஒரு செய்தி உள்ளது.

சிலவகை அரணை இனங்கள் சாப்பிட விஷமுடையதாக இருப்பதால் உணவு பட்டியலில் இவற்றை சேர்ப்பதில்லை.

ராட்சத அரணை இனங்களில் ஐந்து வரிசை கொண்ட மற்றும் நீல நிற வால் அரணைகள் மட்டும் மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகிறது.

ஆனால் இதுவும் உண்மை என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அரணை தீண்டுவதால் எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதே உண்மை.

மாறாக அவை மனிதர்களை தீண்டும் விஷ பூச்சிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்பதே நிதர்சனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here