5 வங்கி கணக்குகள் ஊடாக போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக குறித்த கணக்குகளில் 600 கோடி ரூபாவிற்கு அதிகமான பணப்பறிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here