2020ம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 77வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 72வது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், இம்முறை இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.

இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. உலக சமாதான சுட்டியில் முதல் 10 இடங்களில் நியூசிலாந்து, போர்த்துக்கல், அவுஸ்திரேலியா, டென்மார்க், கனடா, சிங்கப்பூர், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

மேலும் தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்கு 139வது இடம் கிடைத்துள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் முன்னேறியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here