கொடிகாமத்தில் வாகன சாரதியொருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பினால் உயிரிழந்தார்.
பயணிகளை ஏற்றி வந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை வீதீயோரமாக நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வவுனியா வீரபுரத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயராஜ் (61) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
கொழும்பிலிருந்து ஹைஏஸ் வாகனமொன்றில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த நிலையில் கொடிகாமம் பகுதியில் நெஞ்சுவலி ஏற்பட்டதும், வாகனத்தை ஓரமாக நிறுத்தி உள்ளார்.
பின்னர் அவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.




