குருணாகல், கொகரெல்ல பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்ட சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் மாலபே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரை திருட வந்த சந்தேக நபர்களின் ஜீப் மற்றும் வசமிருந்த கைத் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொகரெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் கடந்த 2 ஆம் திகதி கடத்தப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்கை் கும்பல் காரை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here