இலங்கையில் காலாவதியாகிய பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் Hand sanitizer தொடர்பில் தகவல் தெரியவந்தமையால் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய மாலபே, தலாஹேன பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதில் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வகையான சுத்திகரிப்பு கிரீமில் ஒரு வகை வண்ண கலவையைப் பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த கிரீம் வகை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதியாகியுள்ளது. மேலும் இந்த கிரீம் வகையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Hand sanitizer எனும் கிருமிநாசினிகள் கடைகளுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் காணப்பட்டதென சுகாதார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
விசாரணைகளின் போது இந்த நிறுவனத்தை நடத்தி சென்ற சந்தேக நபர், இன்னமும் அந்த கிரும நாசினிகளை கடைகளுக்கு விடுவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.



