தாயின் கருவில் இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றலாம் என இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தொப்புள்கொடியின் இரத்தம், நஞ்சுக் கொடி மற்றும் தாய் பாலின் மாதிரிகள் மூலம் ஆய்வு செய்த மருத்துவர்கள் கொரோனா வைரஸின் அறிகுறிகளை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பெண்கள் அச்சமடைய கூடாது எனவும், வழிக்காட்டல்களை உருவாக்குதல் அல்லது பாதுகாப்பு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஆய்வுக்குழுவின் தலைவரான மிலான் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் கிளேடியோ பெனிசியா தெரிவித்துள்ளார்.
கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றி இருந்த பெண்கள் தொடர்பாக கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
இந்த மூன்று நாடுகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 60 ஆயிரம் பேர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் 28 ஆயிரத்து 800 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் தென் ஆபிரிக்காவில் 13 ஆயிரத்து 674 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவான மரணங்கள் பிரேசில் நாட்டில் ஏற்பட்டுள்ளன.



