பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு செப். 20ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நடப்பு சீசனில் பல தொடர்கள் ரத்தாகி உள்ளன. பிரபல கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் இம்மாதம் 24ம் தேதி தொடங்கி ஜூன் 7ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா பிரச்னையால் இந்த தொடர் செப். 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கும் என அறிவித்திருந்தனர்இந்த நிலையில், தகுதிச் சுற்று ஆட்டங்கள் செப். 21-25 தேதிகளிலும், பிரதான சுற்று செப். 27ம் தேதி தொடங்கி அக். 11ம் தேதி வரையும் நடைபெறும் என புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.

போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் போட்டி அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here