- கல்லூரி முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 1-ம் தேதி தொடக்கம்!
- இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,53,25,779 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
- திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி, அவரது கணவர் சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.
- வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு.
- வேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்; ஆலோசனைக்கு பிறகு, திமுக கூட்டணி அறிவிப்பு.

ஐ.பி.எல்: விளையாட்டு உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த சி.எஸ்.கே – மும்பை போட்டி!September 22, 20203 viewsPosted By : SaravanamanojAuthors

ஐபிஎல் தொடக்க போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை இதுவரை இல்லாத எண்ணிக்கையில் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
ஐபிஎல் 2020 கிரிக்கெட் திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் முன்னாள் சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் ரசிகர்களுக்கு போட்டியை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்துதான் போட்டியை காண வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். அவர்களுக்கு தொலைக்காட்சிதான் சிறந்த பொழுதுபோக்காக விளங்குகிறது. அதுவும் ஐ.பி.எல் தொடர் என்றால் அதிகளவில் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் உண்டு.
அந்த வகையில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டியை இதுவரை இல்லாத எண்ணிக்கையில் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
அதாவது அப்போட்டியை சுமார் 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தியாவின் ஒரு விளையாட்டு போட்டியை இதுபோன்ற அதிகமானோர் பார்த்து ரசித்தது கிடையாது. அதேபோல் உலகளவில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் இந்த எண்ணிக்கை ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.



