அலுமாரி லாச்சுக்குள் துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவொன்றை சடலமாக மீட்ட சம்பவமொன்று இறக்குவாணை – ஹொரமுல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
அதிக இரத்தப்போக்கு காரணமாக இறக்குவாணை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரைப் பரிசோதனை செய்துள்ள வைத்தியர்கள், அவருக்கு மகப்பேறு இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து வைத்தியசாலை அதிகாரிகளால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், அலுமாரி லாச்சுக்குள் துணியில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த பெண் தற்போது காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



