சார்வரி வருடம் புரட்டாசி 07 ஆம் நாள் செப்டம்பர் 23, 2020 புதன் கிழமை, சப்தமி திதி இரவு 07.56 மணிவரை அதன் பின் அஷ்டமி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.25 மணி வரை அதன் பின் அதன் பின் மூலம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிகம் ராசியிலும் தனுசு ராசியிலும் பயணம் செய்வதால் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நான்கு ராசிக்காரர்களும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும் பேச்சில் நிதானம் தேவை.
மேஷம்
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்கள் ராசிக்கு மாலை 06.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இன்றைய தினம் சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண் பேச்சுவார்த்தைகள் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
சந்திரன் சஞ்சாரம் மாலை வரை சாதகமாக உள்ளது. இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு மாலை 06.25 முதல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வீண் வம்பு வழக்குகள் வேண்டாம் வீட்டை விட்டு வெளியே செல்வதைக்கூட தவிர்த்து விடவும்.
மிதுனம்
சந்திரன் சஞ்சாரம் உங்களின் மனநிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றைய தினம் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். திடீர் பயணங்களால் பலன்கள் அதிகரிக்கும்.
கடகம்
சந்திரன் சஞ்சாரம் உங்க ராசிக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இன்று குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
சந்திரன் சஞ்சாரத்தினால் உங்களுடைய குடும்பத்தில் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள் சுப செலவுகள் மூலம் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்
கன்னி
இன்றைய தினம் மிகவும் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் நகைகள் வாங்க இன்று நல்ல நாள் விஐபிக்கள் ஆதரவினால் நன்மைகள் நடைபெறும்
துலாம்
சந்திரன் சஞ்சாரம் உங்க ராசிக்கு சாதகமாக உள்ளது. இரண்டாம் வீட்டிலும் மூன்றாம் வீட்டிலும் சந்திரன் பயணம் செய்வதால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும் சுப செலவுகள் தேடி வரும். திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும்.
விருச்சிகம்
சந்திரன் சஞ்சாரத்தினால் சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பணவரவு உண்டாகும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
தனுசு
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்றைக்கு மாலை வரைக்கும் சுப விரைய செலவுகள் ஏற்படும். சின்ன சின்ன மனக்குழப்பம் வரலாம். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்தால் லாபம் அதிகரிக்கும்
மகரம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு சாதகமாக இருக்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
சந்திரன் உங்களுக்கு சந்தோஷத்தையும் மன தைரியத்தையும் கொடுப்பார். இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆசி கிடைக்கும்.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களால் நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன இடையூறுகள் ஏற்படலாம் கவனம் தேவை.

