இன்று முதல் அமுலாகும் வகையில், நான்கு நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை ஒரு பகுதியிலும், இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை இன்னொரு பகுதியிலும், 8 முதல் 9 வரை மற்றைய பகுதியிலும், 9 முதல் 10 வரை ஏனைய பகுதியிலுமாக நான்கு கட்டங்களில் நாடு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. 

மின் பிறப்பாக்க கட்டமைப்பில் மின்சார உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரை நான்கு நாட்களுக்கு மாத்திரம் மின்சார விநியோகத்தைத் துண்டிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here