இலங்கையில் கொரோனா நோயாளிகளில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளிகளின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் (2020.05.08) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர் எவரும் பதிவாகவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
நேற்றைய தினத்தில் (2020.05.07) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1553 என்றும் அவர் தெரிவித்தார்



