கொரோனா பரவலைத் தடுக்க, உலகம் முழுவதும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கண்டறிய கூகுள் நிறுவனம் உதவ முன்வந்துள்ளது.

கூகுள் நிறுவனம் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொருவரின் இருப்பிடம் குறித்து கூகுள் லொகேஷன் மூலம் திரட்டப்படும் தகவல்களை அந்தந்த நாட்டு அரசுகளுக்கு வழங்க உள்ளது.

இதற்காக 131 நாடுகளில் பிரத்யேக இணையதள வசதிகளை உருவாக்க இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற நாடுகள், தங்கள் குடிமக்களின் நகர்வுகளை இணையம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன் படி இந்த சேவை வரும் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு இணைய சேவை மூலம் பூங்காக்கள், கடைகள் போன்ற இடங்களில் மக்களின் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் எந்த அளவிற்கு அதிகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here