அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாக கொண்ட இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோயினுடன் அக்கரைப்பற்று பழைய சினிமா அரங்கு வீதியில் முதலில் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மற்றைய நபர் அக்கரைப்பற்று நகரில் வைத்து 120 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். 44 ஆயிரம் ரூபா மற்றும் டிஜிட்டல் சிறிய தராசு ஒன்றும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

அம்பாரை மாவட்டத்தில் போதைப் பொருள் வர்த்தகத்தை அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாக கொண்ட இவ்விரு சந்தேகநபர்களுமே வழிநடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here