இலங்கையில் தற்போது தோல் நோய் ஒன்று மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

டைனியா தொற்று காரணமாக குறித்த தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டைனியா (அல்லது கருப்பு குழாய்) தொற்று என்பது வெவ்வேறு பூஞ்சைகளால் ஏற்படும் ஒரு நோயாகும். பூஞ்சை உடலின் வெவ்வேறு பகுதிகளை பாதிக்கின்ற தோல் நோயாகும்.

இந்த நிலையில், அனுராதபுர பகுதியில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் டாக்டர் ஹேமா வீரகோன் தெரிவித்தார்.

இதனை, சாதாரணமாக விட்டால் உடல் முழுதும் பரவுவதுடன், ஏனையோருக்கும் தொற்றும் ஆபத்து உள்ளது.

குறித்த தொற்று நோயை மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் குணப்படுத்த முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here