இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பின்னர், வீதியிலும், வீட்டிலும் செல்லும் வழியிலும் நபர்களின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நேற்றைய தினமும் நபரொருவர் கதிரையில் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார்.

கடவத்தை-கொபியாவத்தை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்த 34 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் தெரியவருவதாவது, மஹர மல்வத்த பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர், நெஞ்சுவலியால் அவதிப்பட்டவாறு நடந்துசெல்வதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

அதன்பின்னர், அவர் வீதியின் அருகிலுள்ள கதிரையில் அமர்ந்தவாறே சில நேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்த பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here