இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல தர்ம போதகரான பன்னல ஞானாலோக்க தேரர், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த பிக்குவின் இறுதி கிரியைகள் நடத்தப்படும் தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அவர் இதனை, ஞானாலேக்க தேரர் உயிரிழந்தமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா பரிசோதனைகளின் பின்னர் கிடைக்கும் அறிக்கையினை அடுத்து அது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here