முதியவர்களுக்கு அரசாங்கத்தினால் மாதாந்தம் பெற்றுக் கொடுக்கப்படும் 2,000 ரூபாய் உதவித்தொகையைப் பெறுவதற்காக ஹட்டன், போகவந்தலாவ உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் உள்ள பலர் இன்று (12) காலை தபால் நிலையங்களுக்கு முன்பாக கூடினர்.

ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 ஆம் திகதி வரை தபால் நிலையத்தில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இருப்பினும், எதிர்வரும் புத்தாண்டு காரணமாக, அரசாங்கம் சமீபத்தில் இன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அறிவித்தது.

இதை அறியாத ஏராளமானோர் குறித்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ள இன்று தபால் நிலையங்களுக்கு வந்த நிலையில் வெறுங்கையுடன் வீடு திரும்பியிருந்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here