பேஸ்புக் ஊடாக அறிமுகமான 13 வயதான சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பேஸ்புக் ஊடாக அறிமுகமான இளைஞனை தேடி, குறித்த யுவதி, காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.
கொழும்பு பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு வருகைத்தந்த சிறுமியை, குறித்த இளைஞன் நீர்கொழும்பிலுள்ள வாடி வீடொன்றிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர், நீர்கொழும்பிலிருந்து கொழும்பு பிரதான பஸ் தரிப்பிடம் வரை அழைத்து வந்த சிறுமியை, குறித்த இளைஞன் இடைநடுவில் கைவிட்டு, தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தலைமறைவாகியுள்ள இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.



