கொழும்பு – தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள சிங்கமொன்று கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி சிங்கம் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மிருகக்காட்சிசாலையிலிருந்த வரிக்குதிரைக் குட்டி மற்றும் நீர்யானை ஆகிய இருவிலங்குகளும் உயிரிழந்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.



