நாட்டை முழுமையாக முடக்குவது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

எனினும், நாட்டை முடக்குவது குறித்து தகவல்கள் காணப்படுகின்ற நிலையில், இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதனால், நாட்டை முடக்குவது குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தன்னால் வெளியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாளைய தினம் (20) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகின்றமை குறித்து தமக்கு தெரியாது என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here