இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை சோதனையிட்ட போது அதில் கஞ்சா போதைப்பொருள் கடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டது.

கடற்படையினரின் படகைக் கண்டவுடன் சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடலில் வீசிவிட்டனர். அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அவற்றைக் கடத்தி வந்த பருத்தித்துறை தும்பளை மற்றும் கொட்டடியைச் சேர்ந்த 22,26 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடற்படையினர் கூறினர்.சந்தேக நபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here