நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிலையங்களில் இன்று திங்கட்கிழமை முதல் சீனி ஒரு கிலோ 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனி விலை 230 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



