வவுனியா பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயதான சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் (30) மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது

இதனால் படுகாயமடைந்த அவன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். எனினும் அவன் மரணடைந்துள்ளான்.

சம்பவத்தில் பம்மைமடு பகுதியை சேர்ந்த சுயந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது சிறுவனே மரணமடைந்துள்ளான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here