கொரோனா தொற்றுறுதியான தாயொருவர், தனது மூன்றாவது குழந்தையை சத்திர சிகிச்சை மூலம் பிரசவித்த பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

கம்பஹா – மாகவிட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாய் சுகவீனம் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குழந்தை சிறந்த உடல் நலத்துடன் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here