வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
கெப் வாகனத்தின் சாரதி கவலைக்கிடமான நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான கே.திலக்குமார மற்றும் கொழும்பு – ஆமர் வீதியைச் சேர்ந்த 31 வயதான பாலசுப்ரமணியம் நிரூபன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள், வவுனியா வைத்தியசாலையின் பிரேம அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






