நுவரெலியா, கண்டி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இன்று மீளவும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரற்ற கால நிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



