தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த“AMPHAN” (உச்சரிப்புUM-PUN) என்ற சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 17ஆம்திகதி) காலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 610 கி.மீதூரத்தில் வடஅகலாங்கு 11.40 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.00 Eஇற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒருமிகப்பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு – வடகிழக்கு திசையில் திரும்பிமே 20ஆம் திகதியளவில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாடுமுழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் 150மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில்150மி.மீ க்கும்அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்துகாலி மற்றும் ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில்வரையானகடற்பரப்புகளில்காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
கடல்நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)



