முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புபொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பபைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் என தெரியவருகின்றது.
மேலும் இம் மாணவன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தரப்பரீட்சைக்கு 2019 இல் தோற்றி மாவட்ட ரீதியில் 3 ம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளார் எனவும் அறியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர….



