இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1117ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1106பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டார்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 434 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 674 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 11 பேரும் குவைத் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here