ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் உணவு விநியோகிக்கும் இடங்கள், சுகாதார தரப்பினர் ஆலோசனைகளுக்கமைய மாத்திரமே திறக்கப்படுமென, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஓட்டோ சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here