இலங்கை அரசாங்கத்தின் இரண்டு பிரதான இணையதளங்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் சைபர் அணி என அடையாளப்படுத்தப்படும் தரப்பொன்றினால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநிர்வாக அமைச்சின் இணையத்தளம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீதே சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன,
குறித்த இணையத்தங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி அடங்கிய புகைப்படமொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 18 ஆம் திகதி நாட்டில் சில அரச மற்றும் தனியார் இணையத்தளங்கள் குறித்த தரப்பினரால் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



