திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் இன்று (30) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முற்பட்டவர் திருகோணமலை-இலிங்கநகர், திருச்செல்வம் வீதியைச் சேர்ந்த மாரிமுத்து வேலாயுதப்பிள்ளை (60 வயது) எனவும் தெரியவருகின்றது.

குடும்பத்தகராறு காரணமாக கணவர் ஒரு இடத்திலும் மனைவி அவரது உறவினர் வீட்டிலும் வாழ்ந்து வந்த நிலையில் மனைவியை தாக்குவதற்காக சென்றபோது தாக்க முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில் கோபம் கொண்ட இவர் கையில் எடுத்துச் சென்ற மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முற்பட்டதுடன்காயப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த வயோதிபர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here