கொக்கட்டிச்சோலை நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக கொலை செய்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

நேற்று அரசடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக வெட்டிய. பட்டிப்பளை கிராமத்தைச் சேர்ந்த நான்கு
நபர்களே இவ்வாறு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டு இறைச்சிக்காக வெட்டிய பசு எதிர்வரும் நாட்களில் கன்று தரக்கூடிய நிலையில் இருந்துள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறியமுடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here